- Category: Homely Divas
- Created: 18 May 2012
- Written by: Maheshwaran
What do you call as screen presence? The ability of an actor to make their presence felt irrespective of the role they are playing or the footage length they get. Some veterans like Rekha, Prakash Raj or thespians like Thilakan command your attention when they are on screen even for few seconds. Sometimes some newcomers manage to garner your attention so that you start watching out for them. Recently I came across a couple of newcomers who managed to grab my attention.
- Category: Relationships
- Created: 17 May 2012
- Written by: Maheshwaran
Rest in peace... Vaithy!!! We miss you a lot!!!
- Category: Tamil
- Created: 11 May 2012
- Written by: Maheshwaran
”எத்தனை நாளுக்கு தான் ஃப்ளாப் இயக்குநராக இருப்பது... சில சினிமாக்களை எடுத்தே சம்பாதிச்ச காசை எல்லாம் அழிச்சாச்சு... ஒரு பையனை பெத்துப்போட்டாச்சு.. அவனை கதாநாயகனா ஆக்கிட்டா வர்ற காலத்துல முதலமைச்சரா அனாலும் ஆயிடுவான்.. ஏன்னா நம்ம தமிழ் ரசிகர்களுக்கு சினிமாவுல இருந்து மட்டும் தான் சி.எம் வேணும்” என்று யோசித்துக்கொண்டிருந்தார் அந்த மூன்றெழுத்து இனிஷியல் இயக்குநர். பையனை வச்சு எடுத்த முதல் படம் கையை சுட்டுவிட... மகனின் இரண்டாவது படத்தில் தன்னால் முன்னுக்கு கொண்டுவரப்பட்ட நடிகர் நன்றிக்கடனாக கிட்டத்தட்ட முழுநீள கௌரவ வேடத்தில் நடித்துக்கொடுக்க, கூடவே கதாநாயகியின் கவர்ச்சியும் சேர்ந்து படத்தை கொஞ்சமாக காப்பாற்றியது.
- Category: Security
- Created: 11 May 2012
- Written by: Maheshwaran
I stumble upon new softwares based on the needs only. When I am working on the computer (desktop or laptop) Buttu insists on sitting on my lap. Ofcourse it is lovely to spend those moments, he gives nightmare effects by pressing random keys while I am typing. So I had to look for some solution to overcome this. As usual Google fetched some choices like Kid-key-lock, Toddler Keys and KeyFreeze. Out of these three I found KeyFreeze to be simple and meeting my requirements.
- Category: Sujatha
- Created: 07 May 2012
- Written by: Maheshwaran
கொஞ்ச நாளாக புதிதாக எதுவும் படிக்கவில்லை. புத்தகம் எதுவும் கொண்டுவரவில்லை, ஏனோ எனது Amazon Kindle-ஐயும் கொண்டுவரவில்லை. என்றோ சுஜாதாவின் சிறுகதைகளை 4Shared வலைதளத்தில் பார்த்தது நினைவுக்கு வந்ததும் அவற்றை பதிவிறக்கம் செய்து வைத்தேன். இருப்பினும் படிக்க நேரமே கிடைக்கவில்லை. ஊருக்கு கிளம்பும் excitement-ல் காலை 4:30 மணிக்கே எழுந்துவிட்டபோதும், விமானத்தில் தூக்கம் வராமல் ஒரே அசதி. திரையில் ஒன்றும் உருப்படியான படங்கள் இல்லாததால் என்ன செய்வது என்று யோசித்தபோது சுஜாதாவின் சில கதைகளை பதிவிறக்கம் செய்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது. படித்துவிட்டு சுடச்சுட எழுதிய குறுவிமர்சனங்கள். இப்போது வானத்தில் பறக்கும்போது பதிவு எழுதுவது ஒரு வித்தியாசமான அனுபவம். இது இரண்டாவது முறை.
- Category: Junks
- Created: 26 April 2012
- Written by: Maheshwaran
I must have born as nomad.... but atleast by heart I am nomad and have this lust to see the world as much as possible before I rest forever. May be because of this (wander)lust I get restless after staying in a place for more than two years and my heart starts longing for a new place. Will I be able to rest my hat in a place for long? This is the question that arises When I look back the places I were in ever since I was born. Some places had impressed me while some places made me look out soon for reasons more than one. So this blog is all about the places that were close to my heart or that made me puke...
- Category: Junks
- Created: 24 April 2012
- Written by: Maheshwaran
பிரசவ வேதனை பெண்களுக்கு மட்டும் தானா? வேலைக்கும் வீட்டுக்கும் balance செய்துக்கொள்ள முடியாத ஆண்களுக்கும் கூட தான். இப்படி தவிக்கும் ஆண்கள் கூட்டத்தில் என்னோடு பலரும் இருப்பார்கள். ஒவ்வொரு implementation project முடியும்போது இதற்கு 'support project'-ஏ பரவாயில்லை, தினமும் வந்தோமா, நமது bucket-ல் இருக்கும் issues-களை ஒழித்தோமா, போனோமா என்று இருக்கலாம். இப்படி வீட்டை விட்டு, குழந்தையை விட்டுவிட்டு எதற்காக இப்படி நாய்ப்பிழைப்பு? என்ன தான் செய்தாலும் கடைசி வரை client சந்தோஷமாக வழியனுப்ப போவதில்லை, இப்படி குடும்பத்தை விட்டுவிட்டு வந்து தனியாக இருந்து கஷ்டப்படுவது அவசியமா என்று தோன்றும். பின்பு 'support project'-க்கு போனதும் கொஞ்ச நாளில் எல்லாம் 'அந்த pressure, வலி எல்லாம் இருந்தாலும், Go-Live போகும் அன்று கிடைக்கும் சந்தோஷமே அலாதி தான்' என்று தோன்றும். இப்படி அல்லாடி அல்லாடியே காலம் முடிந்துவிடும் போல. இந்த Project முடியப்போகிறது. அதனால் அடுத்த project-ல் choice இருக்கும் பட்சத்தில் எதை தேர்ந்தெடுப்பது என்று கொஞ்சம் குழப்பமாகவே உள்ளது. கடவுளே! எனக்கு எது நல்லதோ அதை மட்டும் choice இல்லாமல் கொடு. தேர்ந்தெடுக்கும் குழப்பத்திலிருந்து விடுபடலாமே.
- Category: Junks
- Created: 22 April 2012
- Written by: Maheshwaran
ஒவ்வொரு வருஷமும் ஜனவரியிலே இந்த வருஷம் என்ன பண்ணனும்னு நினைக்கும்போது, கட்டாயம் 120 பதிவுகள் (மாசத்துக்கு பத்து வீதம்) போடனும்னு நினைச்சுப்பேன் ஆனா வருஷா வருஷம் பதிவுகள் எண்ணிக்கை அபாயகரமாக குறைஞ்சுகிட்டே போகுது. நான் பதிவுகள் எழுத ஆரம்பித்தபோது கூட ஓரளவுக்கு பிஸியா தான் இருந்தேன். ஆனால் ஆஃபீஸ் முடிச்சு வெளியே வந்ததும் வேலையை பத்தி சுத்தமா மறந்துடுவேன். ஆனா கடந்த ஒரு வருஷமா வீட்டுக்கு வந்தப்புறம் தான் நிறைய SAP பத்தி நினைக்கிறேன். இந்த project-ல வந்ததுல இருந்து மத்த விஷயங்கள்ல சுத்தமா ஈடுபாடு குறைஞ்சு போச்சு. புதுசா புத்தகம் படிச்சு ரொம்ப நாள் ஆயிடுச்சு. கடைசியா எப்போ தூரிகை (அது தாங்க paint brush) பிடிச்சேன்னு ஞாபகம் இல்லை. ஒருவழியா போன வாரம் Go-Live ஆனதும் கொஞ்சம் வேலை குறைஞ்சிரும்னு நினைச்சா இன்னும் குறைஞ்ச பாடு இல்லை. அடுத்த வாரம் சென்னை வந்து settle ஆனப்புறம் திரும்ப ஓவிய வகுப்புகளுக்கு போகனும்னு முடிவு செஞ்சிருக்கேன். இப்போ தான் மெல்ல மெல்ல மத்த விஷயங்கள்ல் மனசு போகுது. நம்ம வலைமனையை ரொம்ப நாளா கண்டுக்கவே இல்லையேன்னு நினைச்சு அதை புது version-க்கு update பண்ணினேன். இந்த look நல்லா இருக்கா இல்லையான்னு நீங்க தான் சொல்லனும்.
- Category: Hindi
- Created: 22 March 2012
- Written by: Maheshwaran
Actually I was very apprehensive about watching 'Kahaani' before its release. I thought that it would be an emotional drama about a pregnant woman coming in search of her missing husband. Also I thought that "Dirty Picture" is a fluke hit of Vidya which got its initial through the titilating factor, so banking on 'Kahaani' is a sureshot flop. I thought that after "Dirty Picture", Vidya Balan had gone over confident that she can sell a movie on her name. I invented a new theory that there could have been a powerful lobby to get National Award for Vidya Balan so that it can give a boost to 'Kahaani' which will find a few takers. But.. but... whenever I had apprehensions about Vidya Balan, she always proved me wrong. I watched 'Kahaani' only for Vidya Balan but the movie had hit me like a thunder bolt.
- Category: Leisure
- Created: 22 March 2012
- Written by: Maheshwaran
It had been really a long time away from the blog. Meanwhile I joined a new company in Chennai and immediately got into an ongoing implementation project. SAP Consultants will know how demanding and consuming the implementation projects are, that too when you join a project that already somebody was working on, the catching up is still more exhausting. Before I could realise, within 20 days of joining I travelled to Nigeria as a part of the assignment. Never in my wierd dreams I have thought that I'll travel to the dark continent at some point of my life. So the travel itself was almost a shock. Also it happened so suddenly that I didn't get time even to pick my camera from home. So this time my LG Optimus P500 came to rescue.
- Category: Stella Bruce
- Created: 17 January 2012
- Written by: Maheshwaran
எந்த ஒரு கலைப்படைப்புமே ஒவ்வொரு வயதிலும் படிக்கும்போது / பார்க்கும்போது புது அனுபவத்தை அல்லது பரிமாணத்தை கொடுக்கும். உதாரணத்துக்கு சொல்லவேண்டுமானால் நீங்கள் மணிரத்தின் “மௌன ராக”த்தை படிக்கும்போது பார்த்தற்கும், கல்யாணம் / காதலிக்கும் போது பார்ப்பதற்கும் வித்தியாசம் தோன்றும். அதே போல “ஸ்டெல்லா புரூஸ்”ஸின் “மாய நதிகள்”புத்தகத்தை 5 வருடங்களுக்கு முன்பு படித்ததற்கும் இப்போது படித்ததற்கும் நிறைய வித்தியாசம். “மாயநதிகள்” மறைந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்ஸின் பத்தாவது நாவல். எனினும் பெரிதாக பேசப்பட்ட அவரது படைப்புகளில் இதுவும் ஒன்று. மனித உறவின் / மனதின் சிதைவை இவ்வளவு நெருக்கமாக, தத்ரூபமாக வேறு எந்த நாவலாவது சொன்னதா என்று பட்டிமன்றம் போட்டே யோசிக்கலாம். அவ்வளவு நேர்த்தி. இதை நான் வைத்தியின் அறிமுகத்தால் முன்பு 2005-ல் படித்திருந்தேன். பின்பு இப்போது 6 வருடங்கள் கழித்து படித்தபோது இன்னும் அதிகமாக identify செய்துக்கொள்ள முடிந்தது.
- Category: Hindi
- Created: 25 December 2011
- Written by: Maheshwaran
ரொம்ப நாட்களாக பார்க்கவேண்டும் என்று wish list-ல் இருந்த இரண்டு படங்கள் சமீபத்தில் Youtube-லிருந்து பதிவிறக்கத்துக்கு கிடைத்தது. விடுவோமா? நெடுநாளைய ஆசையை தீர்த்துக்கொண்டாயிற்று. அந்த படங்கள் - சமய் (ஹி. 2003) மற்றும் மேல்விலாசம் (மலை. 2010). இரண்டுமே தத்தம் காலத்தில் பரிட்சார்த்த முயற்சி என்று விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை. தேவையற்ற வணிகரீதியான சமாச்சாரங்களை தவிர்த்துவிட்டு தேவையான அளவுக்கு பட நீளம் கொண்டவை.
- Category: General
- Created: 25 December 2011
- Written by: Maheshwaran
பொதுவாக நான் dark-ஆன நாவல்களை / படங்களையும் படிப்பதை அல்லது பார்ப்பதை தவிர்த்துவிடுவேன். காரணம் அந்த அனுபவங்களிலிருந்து வெளியே வர எனக்கு நாட்கள் பிடிக்கும். அதனால் தான் ரொம்ப நாட்களாக ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலை படிக்காமல் தவிர்த்து வந்தேன். இந்த நாவலை பாலாவின் ‘நான் கடவுள்’ வெளிவந்தபோது தான் முதன் முதலில் கேள்விப்பட்டேன். ‘நான் கடவுள்’ படத்தையே எனக்கு பார்க்க பிடிக்கவில்லை அப்படியிருக்க ‘ஏழாம் உலக’த்தை அவ்வளவு சீக்கிரம் படிக்க தோன்றுமா? எனினும் சமீபத்தில் ஜெயமோகனின் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தவுடன் இதனை படிக்க முடிவு செய்தேன். இந்த நாவல் எதை பற்றியது என்று ஏற்கனவே தெரிந்துவிட்டதால் மனதை ஓரளவுக்கு தைரியப்படுத்திக் கொண்டு தான் படிக்க ஆரம்பித்தேன். எனினும் நான் அந்த குறையிலிகளின் உலகத்துக்கு இழுத்துச்செல்லப்படுவதை தவிர்க்கமுடியவில்லை.
- Category: General
- Created: 18 December 2011
- Written by: Maheshwaran
சமீபத்தில் (கடந்த 2-3 வருடங்களாக) ஏதோ ஒரு வகையில் ஜெயமோகனை பற்றி கேள்விப்பட்டதிலிருந்து அவரது எழுத்துகளை படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருந்துக்கொண்டே இருந்தது. எங்கோ அவரது “விஷ்ணுபுரம்” பற்றி கேள்விப்பட்டதிலிருந்து எனக்கு அதை படிக்கவேண்டும் என்று தோன்றியது. எனது நண்பர் அண்ணாமலை சுவாமியிடம் ஒருமுறை அவரது எழுத்துக்கள் பற்றி கேட்டபோது “ஜெயமோகனின் எழுத்துக்களில் ஒரு ஆணவப்போக்கு இருக்கும். அது எனக்கு பிடிக்காது” என்று சொன்னார். மேலும் எனது circle-ல் நவீன இலக்கியம் படிக்கு நண்பர்கள் யாரும் இல்லாத காரணத்தால் ஜெயமோகனின் எழுத்துக்களை பற்றிய சாமானியனின் கருத்துகள் கிடைக்கவில்லை. இப்படியாக 2-3 வருடங்கள் கழிந்துவிட்டன.
- Category: Indra Sounderrajan
- Created: 09 December 2011
- Written by: Maheshwaran
Shift-ல் வேலை செய்யும்போது எப்போதுடா regular time-ல் வருவோம் என்று மனம் துடிதுடிக்கும். இப்போது மாலைகளில் வீட்டுக்கு வருவது என் அம்மாவுக்கு சங்கடமாக உள்ளது. காரணம் - அவர்களது மெகா சீரியல்கள் பார்ப்பது தடைபடுகிறது. வயதானவரை எதற்கு கஷ்டப்படுத்தவேண்டும் என்று என்னை அறைக்குள் சிறை வைத்துக்கொள்வதால் சில சமயம் SAP-ல் என்னை update செய்துகொள்வது, புத்தகம் படிப்பது என்று ஏதோ பொழுதுபோகிறது. அந்த வகையில் இன்று ஒரே மூச்சில் 328 பக்கங்கள் படித்து முடித்த புத்தகம் - “இந்திரா சௌந்தர்ராஜன்” எழுதிய “பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்”. இ.சௌ-வின் புத்தகங்களை படித்தவர்களுக்கு அவருடைய ஆன்மீக த்ரில்லர்களின் layout தெரிந்துவிடும். அதிலிருந்து அச்சு அசல் மாறாத அடுத்த assembly production இந்த “பல்லவன் பாண்டியன் பாஸ்கரன்”.
- Category: Hindi
- Created: 08 December 2011
- Written by: Maheshwaran
இன்னைக்கு காலையிலே யதேச்சையா யாருடைய blog-ஐ படிச்சப்போ அதிலே அவங்க அம்மாவை நினைச்சு பயங்கர sentiment-ஆ எழுதி, அதிலே பாப் சாகரிகா பாடிய “மா..” என்ற பாடலின் வீடியோவையும் இணைத்திருந்தார்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. வழக்கமாக சாகரிகா ”டிஸ்கோ தீவானே” போன்ற beat songs-ஆக தான் பாடிக்கொண்டிருந்தார். அவர் வழக்கமாக அவருடைய சகோதரர் ஷானுடன் இணைந்து டூயட்கள் பாடிக்கொண்டிருந்தார். ஆனால் ஒரு jolt வைத்தது போல இன்ப பேரதிர்ச்சியாக ஒரு melody-ஐ பாடியிருந்தார். பயங்கர soulful பாடல் அது. அந்த Blogger-ன் பதிவில் இந்த பாடலை பார்த்ததும் ‘Open in YouTube' வழியாக திறந்தபோது அந்த காலக்கட்டத்தில் வந்த நிறைய பாடல்கள் இருந்தது. அவற்றை பார்த்ததும் எனக்கு காலச்சக்கரம் பின்னோக்கி சுழல ஆரம்பித்தது.
- Category: Junks
- Created: 06 December 2011
- Written by: Maheshwaran
பேரை கேட்டதும் ஏதோ கில்மா மேட்டர்னு நினைச்சுக்காதீங்க... ஏமாந்து போவீங்க. சந்தியா எழுதின பதிவை படிச்சதும் எனக்கும் என்னோட நைட் லைஃப் ஞாபகங்கள் வந்துச்சு. அதனால என்னோட சில நினைவுகளையும் பகிர்ந்துக்கனும்னு தோணுச்சு. என் பொண்டாட்டி என்னை சரியான தூங்கு மூஞ்சின்னு திட்டுவா. வீட்டில் அப்பாவோ என்னை வேற மாதிரி திட்டுவார். நேரத்தோட படுத்து நேரத்துல எழுந்து பொழப்ப பாரேண்டான்னு திட்டுவார். என்னை பொருத்தவரை எனக்கு மிகவும் பிடிச்ச சமயம்னா அது நள்ளிரவு தான். ஏன்னா அப்போ தான் உலகமே அடங்கிப்போய் அமைதியா இருக்கும். அந்த அமைதி ஏனோ மனசுக்கு பயங்கர சந்தோஷத்தை குடுக்கும் எனக்கு. எனக்கு மூளை கொஞ்சம் சுறுசுறுப்பா வேலை செய்யுறது எல்லாம் அந்த அமைதியான சூழ்நிலையில் தான். இதமான தென்றல் காற்று நம் முகத்தை வருட, நமக்கு பிடித்த வேலையை செய்யும் அந்த அமைதியான தருணங்கள் மிக அழகானவை. அது அனுபவிச்சவங்களுக்கு தான் புரியும். ஒருவகையிலே பெரிய கவனச்சிதறல்கள் இல்லாம நமக்கு பிடிச்ச வேலையை செய்ய இந்த நள்ளிரவு தான் உகந்த சமயம். அந்த சமயங்கள்ல நமக்கு ரொம்ப பிடிச்சவங்க நம்ம கூட இருந்துட்டாங்கன்னா... சொல்லவே வேண்டாம். உலக தொந்தரவுகள் இல்லாம சந்தோஷமா இருக்கலாம்.
- Category: Hindi
- Created: 05 December 2011
- Written by: Maheshwaran
பொதுவாக iconic-ஆக விளங்கும் கனவு கன்னிகளுக்கு அவர்கள் வாழும்போது அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. மாறாக அவர்கள் இறந்த பிறகே அவர்களை உலகம் உச்சத்தில் தூக்கிவைத்து பாராட்டு மழை பொழியும். ஹாலிவுட்டில் ஒரு ”மர்லின் மன்றோ” என்றால் நம் தென்னிந்தியாவுக்கு ஒரு ”சில்க்” ஸ்மிதா. இருவரும் வாழ்ந்த காலத்தில் பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் வாழ்ந்து, தனிமையில் இறந்து போனவர்கள். ஏனோ... ஆண்களின் தூக்கத்தை கெடுத்த இவர்கள் தங்கள் வாழ்க்கையிலும் நிம்மதியாக தூங்கமுடியாமல் தனிமையில் தவித்து கடைசியில் வாழ்வதை விட சாவதே மேல் என்று தங்கள் கதையை முடித்துக்கொண்டார்கள். அவர்களின் கதையை படமாக எடுக்கும்போது அவர்களின் அந்தரங்கங்களை சொல்லவேண்டியதால் அது ஒருவித titilating factor-ஆக மாறிவிடுகிறது. இந்த நடிகைகளின் துயரங்களை காசாக்க (மட்டுமே) முயற்சிக்காமல் வெகு சிலர் தான் அவர்களது வாழ்க்கையை மனதில் பதியும்படி சொல்கிறார்கள். ”சில்க்” ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு சமீபத்தில் ஹிந்தியில் வந்து பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் “The Dirty Picture" ஒரு வகையில் புதிய முயற்சி என்றே சொல்லவேண்டும்.
- Category: Sujatha
- Created: 26 November 2011
- Written by: Maheshwaran
நான் படித்த சுஜாதா எழுதிய முதல் வரலாற்று புதினம் இது. தலைவர் மொத்தமே இரண்டு வரலாற்று நாவல்கள் தான் எழுதியிருக்கிறார் போல. இந்த நாவலை பற்றி பலரும் சொல்லக்கேட்டிருக்கிறேன். அதனாலோ என்னவோ எனக்கு இந்த நாவலை பற்றிய ஓரளவுக்கு அதிகம் எதிர்பார்ப்பு இருந்தது. அது பூர்த்தி அடைந்ததா என்று கேட்டால் பதில் அவ்வளவு திருப்தியாக இல்லை என்று தான் சொல்லவேண்டும். பொன்னியின் செல்வன் முடிந்த சில காலங்களுக்கு பிறகு நடக்கும் சம்பவங்கள் இதில் வருகின்றன. அதனால் நாம் பொன்னியின் செல்வனில் பார்த்த ராஜராஜ சோழனுக்கும், இதில் வரும் ராஜராஜ சோழனுக்கும் நிறைய வித்தியாசங்கள். மேலும் இதிலும் ராஜராஜ சோழன் கதாநாயகன் இல்லை. மாறாக பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் போல இதிலும் ஒரு ‘வ’ தான் கதாநாயகன் - வசந்தகுமாரன்.
- Category: Internet
- Created: 23 November 2011
- Written by: Maheshwaran
என்னடா இந்த பையன் அடுத்த Android post போட்டிருக்கான்... அவன் கிட்டே smartphone இருக்குறதை காமிக்கிறானோன்னு நினைச்சுக்காதீங்க... இன்னைக்கு காலையிலே ரொம்ப யதேச்சையா இந்த Android app-ஐ பார்த்தேன். Deccan Herald பேப்பர்ல ஒரு மூலையிலே குட்டியூண்டா Hotmail founder-ஆன சபீர் பாட்டியா தான் புதிதாக உருவாக்கிய JaxtrSMS என்ற அவருடைய free SMS application நல்ல வரவேற்பை பெரும் என்று நம்புவதாக சொல்லியிருந்தார். நமக்கு தான் Android, application-ங்குற வார்த்தைகளை பார்த்தாலே கை உதற ஆரம்பிச்சிடுமே. உடனே எனது mobile-ல் download செய்துபார்த்தேன். சரி! அது என்ன JaxtrSMS?
- Category: Sujatha
- Created: 22 November 2011
- Written by: Maheshwaran
மறைந்த எழுத்துலக ‘சூப்பர் ஸ்டார்’ சுஜாதா அவர்கள் தமிழ் நடுத்தர வர்கத்தினரை அடிப்படையாக கொண்டு எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்த ’மத்யமர்’. இது 1990-ல் கல்கியில் தொடராக எழுதப்பட்டாலும், கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கப்புறமும் பெரிய மாற்றமில்லாமல் நடுத்தர வர்க்கத்துக்கு பொருத்தமாகவே உள்ளது. மேலேயும் பணக்காரர்கள் வாழ்க்கைக்கும் போக முடியாமல், கீழே ஏழைகளின் வாழ்க்கைக்கும் இறங்கமுடியாமல் இரண்டாங்கெட்டானாக தவிக்கும் இந்த ‘மத்திய’ வர்க்கத்தை பின்புலமாக சோகம், துரோகம், தைரியம் என பலதரப்பட்ட ‘ரச’ங்களை கொண்டு எழுதப்பட்ட இந்த கதைகளை மேலும் சுவாரசியப்படுத்துகிறது ஒவ்வொரு கதைக்கப்புறம் பிரசுரிக்கப்பட்ட வாசகர்களின் கருத்து கடிதங்கள். ரொம்ப நாட்களுக்கு முன்னாடி புத்தக கண்காட்சியில் வாங்கப்பட்ட இந்த புத்தகத்தை எடுக்கவே இவ்வளவு நாட்கள் பிடித்துள்ளது எனக்கு. 12 கதைகளையும், அதன் feedback-ஐயும் படிக்கும்போது கதைக்கு பல புதிய பரிமாணங்கள் கிடைத்தது போன்ற உணர்வு.
- Category: General
- Created: 17 November 2011
- Written by: Maheshwaran
அபுதாபியிலே இருந்தபோது ரொம்ப நாளைக்கு நான் ஒரு நோக்கியா ‘கல்’ மொபைல் வச்சிருந்தேன். அப்போ எனக்கு மொபைல் மேலே அவ்ளோ craze எல்லாம் இல்லை. அப்புறம் அபுதாபியிலே இருந்து இந்தியாவுக்கு வந்தப்போ அபுதாபி ஞாபகமா ஒரு Sony Ericcson w700i வாங்கிட்டு வந்தேன். அப்புறம் அது தொலைஞ்சப்போ தற்காலிகமா ஒரு நோக்கியா 1100 வாங்கினேன். ஆனா அது எனக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு. காரணம் அதிலே இந்திய மொழிகள் enable செய்யப்பட்டு இருந்தது. அதனாலே நான் என்னோட மொபைலிலே தமிழ்-ஐ main language-ஆக வச்சிருந்தேன். மத்த advanced model-உம் எதிலேயும் தமிழ் இல்லாததால கிட்டத்தட்ட 2 வருஷம் அதே மொபைலேயே வச்சிருந்தேன். அப்புறம் இன்னொரு மொபைலும் தொலைஞ்சதால இந்த தமிழ் மொபைல் இன்னுமொரு வருஷம் கூட இருந்தது. லண்டன் போன ஞாபகார்த்தமா என்னோட முதல் Smartphone-ஐ வாங்கினேன்.
- Category: Junks
- Created: 17 November 2011
- Written by: Maheshwaran
குழந்தைகள் வளர்வதை பார்ப்பதே ஒரு சந்தோஷமான விஷயம். சமயத்தில் அந்த சந்தோஷத்தில் நாம் சில விஷயங்களை கோட்டை விட்டுவிடுகிறோம் என்று தோன்றுகிறது. குறிப்பாக குழந்தைகள் Mobile Games / Video Games / PSP இவற்றை உபயோகிக்க ஆரம்பிக்கும் போது நமக்கு அது பிரமிப்பாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் அது ஒருவித addiction ஆக மாறும்போது நமக்கும் தலைவலியாக மாறிப்போகிறது. இதில் முழுதாக குழந்தைகளை குறை சொல்லிவிடமுடியாது. நாம் என்ன செய்கிறோம் என்பதை தான் குழந்தைகள் replicate செய்கிறார்கள். அதனால் நாமும் கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ளவேண்டும் என்பது சமீபத்தில் கண்கூடாக புரிந்தது. ஆதி என்னுடைய mobile-ஐ எடுத்து விளையாடிக் கொண்டிருக்கும்போது எனக்கு அது சந்தோஷமாக இருந்தது. அவன் தானாக screenlock-ஐ open செய்து media player / folder-க்குள்ளே navigate செய்து அவனுக்கு தேவையான பாடல்களை தேர்ந்தெடுக்கொள்ளும்போது பிரமிப்பாக இருந்தது.
- Category: Nature
- Created: 13 November 2011
- Written by: Maheshwaran
ஆதி பயங்கர claustrophobic. அவனுக்கு வீட்டுக்குள்ளே இருப்பது சுத்தமாக பிடிக்காது. வெளியே போவது என்றால் அவனுக்கு இயற்கை சார்ந்த இடங்களை ரொம்ப ரசிப்பான். குறிப்பாக நீர்நிலைகள், காடு என இருக்கவேண்டும் அவனுக்கு. கூட வந்தவர்களை தூக்க சொல்லாமல் அவனே ஓடி ஆடி பயங்கரமாக enjoy செய்வான். எனக்கு அவனிடம் மிகவும் பிடித்த அம்சமே அது தான். ஆடு, மாடு, கோழி என எதை பார்த்தாலும் அப்படியே டேரா போட்டுவிடுவான். கடந்த முறை சேலம் வந்தபோது அவனை கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்றபோது ஐயா செம ஆட்டம். ஒகேனக்கல்லிலும், மதுரை அழகர் மலையிலும் தலைவர் அடித்த லூட்டிகள் சுவாரசியம். நான் இயற்கையை ரசிப்பதைவிட அந்தந்த இடங்களில் அவன் முகத்தில் தென்படும் குதூகலத்தை ரசிப்பது இன்னும் இனிமை. அதனால் இந்த வாரம் சேலம் வந்தபோது அவனை எங்காவது இயற்கை சூழ்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று தோன்றியது. அப்போது என் அக்கா அவனை குரும்பப்பட்டியில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு அழைத்துப்போ என்று suggest செய்தார். ஆனால் மிருகங்கள் அதிகமில்லை என்பதையும் சொன்னார். சரி! போய் தான் பார்ப்போமே என்று தோன்றியது.
- Category: Indra Sounderrajan
- Created: 13 November 2011
- Written by: Maheshwaran
கிட்டத்தட்ட 90-களின் பிற்பகுதியில் - சன் டி.வி வீடுகளில் காலூன்ற ஆரம்பித்த சமயம் - cable TV connection இருந்த நகர்ப்புறங்களையும், டவுன்களையும் சொல்லப்போனால் கிட்டத்தட்ட முக்கால்வாசி தமிழகத்தை வியாழக்கிழமைகளில் பயமுறுத்தி முடக்கிய “பெருமை” கே.பாலசந்தரின் “மின் பிம்பங்க”ளுக்கும், இந்திரா சௌந்தர்ராஜன் - நாகா கூட்டணிக்கு மட்டுமே உண்டு. அவர்களது கைவண்ணத்தில் உருவான “மர்மதேசம்” தொடர் மூலம் தமிழக வாசகர்களின் முதுகுத்தண்டை உறையவைத்துக்கொண்டிருந்தது. முதலில் வந்த “ரகசியமாய் ஒரு ரகசியம்” ஒரு நாயை கொண்டு பயமுறுத்திக்கொண்டிருந்தது என்றால் அடுத்து வந்த “விடாது கருப்பு” ஒரு குதிரையை வைத்து தமிழ் நேயர்களை முடக்கிக்கொண்டிருந்தது. கடந்த முறை புத்தகங்கள் வாங்க போனபோது இது “விட்டுவிடு கருப்பா” என்ற பெயரில் புத்தகமாக பார்த்தேன், வாங்கினேன்.
- Category: Junks
- Created: 13 November 2011
- Written by: Maheshwaran
சில வருடங்களுக்கு முன்னாடி என்னோட ஈமெயிலோட இன்பாக்ஸை திறந்த உடனே “உங்கள் நண்பர் தனது போட்டோவை உங்களோட பகிர்ந்துக்குறார். பாருங்க”-ங்குற ரீதியிலே ஏதாவது மெயில் வந்திருந்தா ரொம்ப சந்தோஷமாயிடுவேன். திறந்து பார்த்தா “இந்த link-ஐ click பண்ணி புது அங்கத்தினரா சேருங்க”ன்னு சொல்லும். ஐய்யோன்னு இருக்கும். ஆனா இது எப்போவாவது நடக்கும்... ஆனா கடந்த 1-2 வருடங்களாக இது மாதிரியான தொல்லைகள் அதிகமாயிடுச்சு. 10 மெயில் வந்தா அதுல குறைந்தது 4-5வது இது மாதிரியான மெயில்களா வரத்தொடங்கியது. நம்ம பசங்க இவ்ளோ பாசக்காரனுங்களான்னு பாக்கும்போது தான் “Send invitation to your friends"னு சொல்லி அவங்களோட contacts-ஐ எடுத்துக்குது. இவனுங்களும் “காசா பணமா”ன்னு “OK" குடுத்துடுறாங்க. அதனால எல்லாருக்கும் இது போன்ற மெயில்கள் வந்து தொல்லை பண்ணுது.
- Category: Tamil
- Created: 07 November 2011
- Written by: Maheshwaran
இந்த வாரம் மிக யதேச்சையாக மூன்று நல்ல படங்களை பார்க்க நேர்ந்தது. 7ம் அறிவு உட்பட மொத்தம் நான்கு படங்கள் பார்த்தபோதும் அதில் மூன்று முத்துகளாக அமைந்தது சந்தோஷம். கன்னட ராஜ்யோத்சவ தினத்தை முன்னிட்டு எங்கள் ஆஃபீஸில் கன்னட புத்தகங்கள், CD & DVD sales போட்டிருந்தார்கள். அதில் ‘இஜ்ஜோடு’ என்ற கன்னட படத்தின் DVD-ஐ வாங்கினேன் - மீரா ஜாஸ்மின் நடித்த படம் என்ற ஒரே காரணத்துக்காக. அனன்யா அக்கா ஞாபகப்படுத்தியதால் ’ப்ரணயம்’ என்ற மலையாளப் படத்தை பதிவிறக்கம் செய்துவைத்தேன். மற்றும் தமிழில் long due ஆன “வாகை சூட வா”. இது தவிர்த்து “7ம் அறிவு” பார்த்தோம். இதில் 7ம் அறிவு தவிர மீதி மூன்றும் நல்ல கவிதைகள். மூன்று படங்களும் மனதை தொட்ட படங்கள் என்றபோது emotionally drain செய்யாமல், நல்ல படங்களை பார்த்த திருப்தியை கொடுத்ததால் இந்த பதிவு.
- Category: Opinions
- Created: 06 November 2011
- Written by: Maheshwaran
நேத்திக்கு என்னோட நண்பர் கிட்டே பேசிகிட்டே இருந்தப்போ புட்டுவை (ஆதித்யா) ஸ்கூல்ல போடுறது பத்தி பேச்சு வந்துச்சு. அவனுக்கு ரெண்டு வயசு முடிஞ்சுடுச்சே அப்போ இன்னும் ஆறு மாசத்துல ப்ளே ஸ்கூல்ல போட்டுடுங்கன்னு சொன்னார். எனக்கு என்னவோ அதில் உடன்பாடு இல்லை. அதுங்க LKG-க்கு ஓட ஆரம்பிச்சா அடுத்து 20 வருடங்களுக்கு (PG உட்பட) ஸ்கூலுக்கு ஓடிகிட்டே இருக்கனும். இதிலே எதுக்கு ஒரு வருஷம் முன்னாடியே ஓடவிடனும்னு தோணுது. முன்னாடி பெற்றோர்கள் ரெண்டு பேரும் வேலைக்கு போறதால குழந்தையை பாத்துக்க நேரமில்லாம Creche, உடனே Play Schoolனு போட்டாங்க. அது பின்னே Peer Pressure-ல “பக்கத்து வீட்டு புள்ள Play School போகுது, நம்ம புள்ளக்கு முன்னாடியே ABCD கத்துகிச்சு”ன்னு பெற்றோர்கள் முண்டியடிச்சு சேர்த்து இப்போ PlaySchoolங்குறது ஒரு Norm ஆகவே மாறிப்போச்சு. My parents dote on Buttu. அவங்களும் அவன் கூட இன்னும் கொஞ்ச நாள் செலவழிக்கட்டுமே.